Monday 17 November 2014

கம்பன் கழக 2014 டிசம்பர் மாதக் கூட்டம்: 

கம்பன் மணி மண்டபம், காரைக்குடி 630 001

04565 237600/  94450 22137

6-12-2014 சனிக்கிழமை மாலை 6 மணி

1. இறை வணக்கம்

2. வரவேற்புரை -  திரு கம்பன் அடிசூடி

3." கம்பனுக்குள் தேடுங்கள்; தேடாததும் கிடைக்கும்" ---

                                எழுத்தாளர் திருமதி மகேஸ்வரி சற்குரு

                               இயக்குனர்: 'தேடலும் தெளிதலும்' சுய முன்னேற்ற

                               ஆலோசனை அகம், கோயம்புத்தூர்

4. சுவைஞர்கள் கலந்துரையாடல்

5. நன்றி

6. சிற்றுண்டி

கம்பன் புகழ் பருகிக் கன்னித் தமிழ்  வளர்க்க எல்லோரும் வருக!

காரைக்குடி                                  கம்பன் அடிசூடி,

                                           செயலாளன், கம்பன் கழகம்

                                                                

Tuesday 17 June 2014

காரைக்குடி கம்பன் கழகத்தின் நாற்பத்தாறாம் கூட்டம், ஜூலை 2014

கம்பன் கழகம்
கம்பன் மணிமண்டபம்
காரைக்குடி
 
அன்புடையீர்
வணக்கம்
 கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளரக்கும் ஜூலை மாதக் கூட்டம் 5-7-2014 ஆம் நாள் சனிக்கிழமை மாலை ஆறுமணிக்குக் கம்பன் மணி மண்டபத்தில் நடைபெறுகிறது


6.00 மணி -இறைவணக்கம்
06.03 மணி-வரவேற்புரை
6.10 மணி -கம்பனைப் படித்தால் சாதனைகள் சாத்தியமே - பேச்சுரை
         திருமதி சுமதிஸ்ரீ
7.25. மணி -சுவைஞர்கள் கலந்துரையாடல்
7.55 மணி-நன்றி
8.00 மணி- சிற்றுண்டி

கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக

அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்

நிகழ்ச்சி உதவி

காரைக்குடி அழகப்பா கலைக் கல்லூரி மேனாள் தமிழ்த்துறைத்தலைவரும் கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியின் இந்நாள் தமிழ்த்துறைத் தலைவருமாகிய பேராசிரியர் இ. கார்மேகம் அவர்களுக்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும் பல்லாண்டு.

Wednesday 30 April 2014

2014 ஆம் ஆண்டு மே மாத கம்பன் கழகக்கூட்டம்

காரைக்குடி கம்பன் கழகத்தின் மே. மாதக் கூட்டம் எதிர்வரும் 3. ஆம் தேதி மாலை கம்பன் கலையரங்கில் நிகழ உள்ளது. அதன் நிகழ்வு விபரம் பின்வருமாறு.


மாலை. 6.00 மணி
 கம்பன் கலையரங்க முன்மண்டபம்

6.00 மணி இறைவணக்கம்
6.03 வரவேற்புரை
6.10 மணி
இராவணன் மேலது நீறு - பேராசிரியர் சபா. அருணாசலனார்

7.25 சுவைஞர்கள் கலந்துரையாடல்

7.55 நன்றி
8.00 சிற்றுண்டி

கம்பன் புகழ்பருகிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக

18.04.2014
காரைக்குடி                                                               அன்பும் பணிவுமுள்ள
                                                                                       கம்பன் கழகத்தார்


நிகழ்ச்சி உதவி
தம் ம்னைவியார் அருளரசி வசந்தா அம்மையார் நினைவைப் போற்றி
பேராசிரியர் நற்கதை நம்பி அய்க்கண் அவர்கள்

Thursday 3 April 2014

2014 ஏப்ரல் மாதக் கூட்டம் -

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத காரைக்குடி கம்பன் கழகக் கூட்டம் 05.04.2014 அன்று மாலை ஆறுமணியளவில் கம்பன் மணிமண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் கம்பன்காட்டும் நெருக்கடி கால மேலாண்மை என்ற தலைப்பில் மதுரைமீனாட்சி அரசு கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் திருமதி யாழ். சு. சந்திரா அவர்கள் உரையாற்ற உள்ளார். நிகழ்ச்சி உதவி காரைக்குடி திரு. ப.மு. சித. பழனியப்பர் குடும்பத்தார்

Wednesday 19 March 2014

கம்பன் 2014 உலகத் தமிழ்க் கருத்தரங்கின் விருந்தோம்பல் பற்றி சிங்கப்பூர் திருமிகு வரதராசன் அவர்களின் மதிப்புரை

காரைக்குடி கம்பன் விழா - விருந்தோம்பல்.
 
செட்டிக் குலத்தவர் செய்விருந் தோம்பலுக்(கு)
அட்டியெது(ம்) இல்லை அறிந்திடுவாய். - ஒட்டி
உறவாடு(ம்)  அன்னார்க்(கு) உளமார்ந்த நன்றி 
மறவாமல் சொல்வேன் மகிழ்ந்து. 
 
இலையே உரைக்கு(ம்) இதயத்தின் வீச்சை; 
மலையென்(று) உறைகின்றார் மாண்பில். - குலையா 
நகரத்தார் காட்டுகிற நல்விருந்  தோம்பலைப்
பகரத்தான் வேண்டும் பணிந்து.    
 
சிரித்த முகம்கொண்டு செட்டிநன் நாட்டார்
விரித்தயிலை யிட்டார் விருந்து.- கருத்தூன்றித் 
தன்னலம் போக்கிய  தாய்மார்க்கு நன்றிபல
முன்னம்யான் கூறல் முறை.
 
 
போலியான அன்பின்றிப் புன்னகைப்பார்; எந்தவோர் 
வேலியும் கட்டார் விருந்துக்குக். - கோலமுடன் 
காரைக்  குடிமக்கள்  காட்டுகிற நல்லன்பின்
சீரை உளம்வைத்துச் செப்பு. 
   
எப்பொழுதும் வந்தவர்பால் இன்முகத்தர் என்றாகி 
முப்பொழுதும் இட்டார் முழுவிருந்து. - அப்பழுக்(கு)
ஏதுமே இல்லாமல் இன்னுரை யார்மாட்டும்
கோதறச் சொல்வார் குளிர்ந்து. 
 
காசுபணம் பாரார்; களங்கமறு உள்ளத்தில் 
நேசமதை  மட்டும் நிறைக்கின்றார். - தேசுமிகு,
வள்ளிமுத் தையாவின் வற்றாக் கனிவன்பு
உள்ளிருக்கு(ம்) என்று(ம்) உறைந்து.     
 
பண்டத்தின் மேன்மை பகர்ந்திடும் பாவல்லான் 
அண்டத்தில் இல்லை அறைந்திடுவேன். - தண்டனிட்டுச் 
சென்னியவர் பாதத்தில் சீராய்ப் படிந்திருக்கப் 
பன்னினேன் நன்றியுரைப் பா. 
 

வரதராசன். அ.கி.  

Monday 17 March 2014

துறைதோறும் கம்பன் - ஆய்வுக்கோவை வெளிவந்துவிட்டது


கம்பன் தமிழாய்வு மையத்தின் சார்பில் 15-16 (மார்ச்) ஆகிய நாள்களில் நடத்தப்பட்ட இரண்டாம் உலகத் தமிழ் கம்பன் கருத்தரங்க ஆய்வுக்கோவையின் காட்சி இது. 150 கட்டுரைகள் கொண்ட அருமையான கம்பன் பற்றிய முக்கியமான தொகுப்பு
வேண்டுவோர் பெற மின்னஞ்சல் செய்க.

காரைக்குடி கம்பன் தமிழாய்வு மையத்தின் இரண்டாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கின் காட்சிகள்


கம்பன் திருநாள் (2014 ) காட்சிகள்


கம்பன் திருநாள் (2014 ) தொடக்க நாள் நிகழ்ச்சி
அரங்கில் கம்பன் அடிசூடி, முனைவர் சாரதா நம்பியாரூரன், நீதியரசர், டால்பின் அவர்கள், மற்றும் சச்சிதானந்தம், லட்சுமி (சிங்கப்பூர்)
அந்தமான் கிருஷ்ணமூர்த்தி


காரைக்குடி கம்பன் திருநாள் சிறப்புடன் நடைபெற்று முடிந்தது. இதனுடன் இணைந்து நடத்தப்பெற்ற உலகத் தமிழ்க் கருத்தரங்கம் (துறைதோறும் கம்பன் ) பேராளர்களின் பெருத்த வரவேற்புடன் நடந்து முடிந்தது அ்தன் காட்சிகள் உங்களின் பார்வைக்கு




இந்த மூவர் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள்


 அரங்கக் காட்சிகள் 



 அமிழ்தினும் இனிய அறுசுவை உணவு


நிறைவு விழா







Thursday 6 March 2014

காரைக்குடி கம்பன் திருநாள் அழைப்பு (2014 )

 
 
 
உலகத் தமிழ் ஆய்வுக் கருத்தரங்கின்  அழைப்பும்  கம்பன் திருநாள் அழைப்பும் இதனுடன் வருகின்றன. அன்புடன் அனைவரும் வருக.
 
 
 
 




 

Saturday 15 February 2014

உலகத் தமிழ்க் கருத்தரங்கு- துறைதோறும் கம்பன் - கட்டுரைகள் பெறும் நாள் நிறைவடைந்துவிட்டது.

துறைதோறும் கம்பன் என்ற இரண்டாம் உலகத் தமிழ்க்கருத்தரங்கிற்கான கட்டுரைகள் பெருமளவில் வந்துள்ளன. கட்டுரை தேர்வான விபரமும் கட்டுரையாளர்களுக்கு அனுப்பப்பெற்றுள்ளது. கட்டுரைகள் அனுப்ப நாள் முடிந்துவிட்ட காரணத்தால் இனிவரும் கட்டுரைகள் ஏற்கப்படாத நிலையில் உள்ளன.

கட்டுரையாளர்கள் அனைவரும் காரைக்குடி மாநகருக்கு கம்பன் புகழ் பாட அவசியம் வருக.

Friday 24 January 2014

இந்து நாளிதழில் வெளிவந்துள்ள கம்பர் சமாதி பற்றிய கட்டுரை

Unearthing the ‘wisdom’ at Kambar’s ‘samadhi’

D.J.Walter Scott

It is the fourth generation of the family that is maintaining the ‘samadhi’ now

PLACE OF WORSHIP:An inside view of Kamban ‘samathi’ at Nattarasankottai in Sivagangadistrict.— Photo: L. Balachandar
PLACE OF WORSHIP:An inside view of Kamban ‘samathi’ at Nattarasankottai in Sivagangadistrict.— Photo: L. Balachandar
‘Kavichakravarthi Kambar’, the great Tamil poet is worshiped as a ‘God of Wisdom’ at his ‘samadhi’ here and the soil from the place where he was believed to have been laid to rest is revered by one and all.
Local villagers place a drop of this soil mixed with milk in the mouth of newborn babies wishing that this would help the children get the great poet’s poetic gift.
Children who visited the temple with their parents were also given ‘Kambar man’ as ‘prasadam’ so that they can have it mixed with water or milk to gain wisdom. This unique practice is being followed for nearly a century.
The ‘samadhi,’ in the midst of a wooded ten-acre site on the outskirts of the town panchayat, is being maintained by the family of Avichi Chettiyar or Kambar Chettiyar belonging to the local Nagarathar community. As of now, it is the fourth generation of the family that is maintaining the ‘samadhi’ and a priest has been appointed to conduct a one-time pooja in the temple.
Legend has it that Kamban, who was in despair after his son, Ambikapathy, was put to death by King Kulothunga Chola for falling in love with his daughter, princess Amaravathy, reached the village and spent his last days here.
Recalling the history, Mr. Pala.Palaniappan, secretary, Kamban Kazhagam in Karaikudi said the ‘samadhi’ was first spotted in 1939 by Tamil scholar and Kazhagam founder Sa.Ganesan after seeing people reverently taking soil from the spot and giving it to their children. “People had been removing the earth for several years but it seemed to replenish itself and this was seen as a miracle,” he said.
He and Avichi Chettiyar then built a temple over the spot though there was no historic evidence to prove that the poet was laid to rest here, Mr. Palaniappan told The Hindu . A group believes that Kamban lived in the 9th century while the other says that he lived in the 12th century. “Unfortunately, none of the songs of Kamban had any reference to any king to determine the period,” he said.
Besides the daily pooja at the ‘samadhi’ by the Chettiyar family, the Kamban Kazhagam organises an annual four-day festival, three days at Karaikudi and the final day at the ‘samadhi’ on Panguni Astham, a day when the poet was honoured with the title ‘Kavichakravarthy’, he said.
“We consider it as a great privilege and our family will continue to maintain the ‘samadhi,’ says Ms. K.N.Visalatchi of the Chettiyar family. Her father-in-law Ramanatha Chettiyar was fondly called ‘Kambar Chettiyar’ and the family would like to be identified with the great poet, she says.

 நன்றி -இந்து (ஆங்கில நாளிதழ்)

Wednesday 22 January 2014

2014 ஆம்ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கிற்குக் கட்டுரைகள் வந்து குவிந்துகொண்டுள்ளன.

அன்புடையீர்
வணக்கம்
முதல் கட்டமாக வந்த கட்டுரைகள் அனைத்தும் அச்சுக் கட்டமைப்பிற்குச் சென்றுள்ளன. பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் கட்டுரைகளை அனுப்பி உதவுங்கள். செம்மையாக கருத்தரங்கக் கட்டுரைகளைக் கோர்க்க உதவுங்கள்.


காரைக்குடி கம்பன் கழகத்தின் பிப்ரவரி மாதக்கூட்ட அழைப்பு (2014)

கம்பன் கழகம்
காரைக்குடி

அன்புடையீர்
வணக்கம்
கம்பன்புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் பெப்ரவரி மாதக் கூட்டம் 1-2-2014 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கம்பன் மணிமண்டபத்தில் நிகழும். திரு. கம்பன் அடிசூடி தம் பெற்றோர் நூற்றாண்டு நிறைவு நினைவாக நிறுவியுள்ள மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளையின் ஏழாம் ஆண்டு ஆய்வுச் சொற்பொழிவினை கம்பனில் விண்ணோடும் மண்ணோடும் என்ற தலைப்பில் முத்தமிழ் அறிஞர் ஞானவாணி பேராசிரியர் திருமதி இளம்பிறை மணிமாறன் நிகழ்த்துகிறார்கள்.
கவிச்செம்மல் கவிஞர்கோ கவிமாமணி, தமிழறிஞர்,டாக்டர்.ரெ.முத்துக்கணேசனார் தலைமை ஏற்றுச் சிறப்பிக்கின்றார்கள்.
கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கஅன்பர்கள் யாவரும் வருக.

11.1.2014
காரைக்குடி அன்பும்பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்

நிகழ்நிரல்
மாலை 6.00மணி இறைவணக்கம்
கம்பன் கற்பகஆசான்மார்
திருமதி பாண்டிச்செல்வி, செல்வி கோமதி

6.05. வரவேற்புரை
திரு கம்பன் அடிசூடி

6.15. தலைமைஉரை
டாக்டர் ரெ. முத்துக்கணேசனார்

6.30
கம்பனில் விண்ணோடும்மண்ணோடும் -உரை
பேராசிரியர் இளம்பிறை மணிமாறன்

நன்றியுரை
சிற்றுண்டி
நிகழ்ச்சி உதவி - மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளை

Saturday 18 January 2014

அமைதி நிலவட்டும்.

கம்பன் தமிழாய்வு மையம் சார்பாக நடத்தப்பெறும் கருத்தரங்கிற்கு வாழ்த்துகளும், கைகோர்ப்புகளும் வந்து சேருகின்றன. டாக்டர் விரேஷ்வரன் அவர்கள் அனுப்பிய கவிதை இதனுடன் வருகிறது.

கம்பனும் பாரதியும் கண்ட கனவு பாலம் அமையட்டும் - அதில்
கண்டிக்கும் காஷ்மிருக்கும் துரந்தோ ரயில் அதி வேகமாக போகட்டும்!!!

இராமபிரான் இலட்சுமணன் பரதனை போல்
இந்தியாவும் இலங்கையும் தோளோடு தோள் இணையட்டும்.

இலங்கை தமிழர், சிங்களர் இன்னலெல்லாம்
இரவு போய் பகல் வந்தது போல்
இன்ப நாள் விடிந்து ஒளிரட்டும்.


டாக்டர் வீரேஷ்வரன் 

Dr.V.K.Veereshwaran,(70 yrs) BVSc, MVSc, MA (Gandhian Thought,)  
     MPhil,(Gandhian Thought & Peace Making,
     (Ph.D) Gandhian Thought & Peace Science.
Deputy Director of Animal Husbandry (Retired)
No21. Chruch Road, (New Mount Road),
Nandhivaram, Guduvancheri.603 202.
Cell Phone No: 99628 04745



அந்தமானைத் தொட்ட கம்பன் தமிழாய்வு மையம்.

2013 ஆம்ஆண்டு நடைபெற்ற கம்பன் தமிழாய்வு மையத்தில் கட்டுரை வாசித்த அந்தமான் அன்பர் அந்தமான் தமிழ்நெஞ்சன் அவர்கள் இவ்வாண்டிற்குள் கம்பன் குறித்த புத்தக்கத்தைவெளியிடும் அளவிற்கு வளர்ந்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள். அவரின் நன்றி பாராட்டிய மடல் இதனுடன்வருகிறது.


அன்புடையீர்...

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பார்கள். கம்பன் கழகத்தின்
அரங்கத்தில் காலடி பதித்த நல்ல நேரம், ஒரு நூல் வெளியிட உதவியுள்ளது.

கம்பன் தொடர்பாக அந்தமானில் வெளிவரும் முதல் நூல் இது. நாளை அந்தமான்
தமிழர் சங்கம் நடத்தும் பொங்கல் விழாவில் நூல் வெளி வர உள்ளது. முனைவர்
சரஸ்வதி இராமநாதன் அவர்கள் முன்னுரை வழங்கி என்னையும் என் எழுத்தினையும்
கௌரவப் படுத்தியுள்ளனர்.

நூலின் பிரதியினை உங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கின்றேன். இந்தப் பாமரன்
கம்பனை எப்படி பார்த்துள்ளேன் என்பதினை அறிய வைத்திட.

உங்களின் ஆதரவு ஆசியும் வேண்டிநிற்கும்

அந்தமான் தமிழ் நெஞ்சன்
டி என் கிருஷ்ணமூர்த்தி

Wednesday 8 January 2014

தினமலர் செய்தித்தாளில் கருத்தரங்கு பற்றிய அறிவிப்பு


உலகத் தமிழ் ஆய்வுக் கருத்தரங்க கட்டுரைகள் அனுப்புவதற்கான தேதி நீட்டிப்பு


பலரின் வேண்டுகோளுக்கு இணங்க காரைக்குடி கம்பன் தமிழாய்வு மைய இரண்டாவது உலகத் தமிழரங்க ஆய்வுக் கட்டுரைகள் அனுப்புவதற்கான கடைசித் தேதி 15-1-2014 லிருந்து 1-2-2014 வரை நீட்டிக்கப் பெற்றுள்ளது.ஆய்வாளர்கள் இதனைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டுகின்றோம்.