Thursday 8 November 2012

உலகத் தமிழ் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம்




வணக்கம். 1939ஆம் ஆண்டு கம்பனடிப்பொடி சா. கணேசனாரால் தொடங்கப் பெற்ற காரைக்குடிக் கம்பன் கழகம், எந்த ஒரு இலக்கிய அமைப்பின் சரித்திரத்திலும் நிகழ்ந்திராத வண்ணம், தொடர்ந்து  எழுபத்தி நான்கு ஆண்டுகள் கவிச்சக்கரவர்த்தி கம்பன் திருநாளைக் கொண்டாடி கன்னித் தமிழ் வளர்ப்பதில் தன் சேவையைச் செய்து வந்துள்ளது மாபெரும் சாதனையாகும்.
1989ல் நிகழ்ந்த கம்பன் திருநாள் பொன்விழாவை ஒட்டி தில்லியிலிருந்து முதன் முதலில் தமிழகத்திற்கு சாகித்திய அகாதெமியினரை அழைத்து வந்து அகில இந்திய இராமாயண மாநாடு ஒன்று வெற்றிகரமாக இரண்டு நாட்கள் நடைபெற்றது. 2013 மார்ச் மாதம் 21உ முதல் 27உ வரை வெகு விமரிசையாக நிகழ உள்ள கம்பன் திருநாளின் ஒரு வார பவள விழாவை ஒட்டி “காலந்தோறும் கம்பன்” என்ற உலகத் தமிழ் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் ஒன்றினை நடத்த திட்டமிடப் பெற்று ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

  முத்தமிழ்த் துறையில் முறை போகிய தமிழக அறிஞர்கள், கலைஞர்கள், வல்லுனர்கள் இம்முயற்சியினை வாழ்த்தி வரவேற்று ஆதரவுக் கரம் நல்கியுள்ளனர். இப் பன்னாட்டுக் கருத்தரங்கம் சிறப்பாக நிகழ்ந்திடவும், கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்த்து தம் ஆய்வு முடிவுகளால் செந்தமிழ்ப் பணியில் பங்கேற்று செம்மொழித் தமிழைச் சீராட்டிடவும்,  உலகெங்கிலும்  உள்ள தமிழ்ப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், சுவைஞர்கள் எல்லோரையும் இரு கரம் கூப்பி இனிப்புடன் தமிழ் கூறி வரவேற்கிறோம்; வந்து கலந்து மகிழ்ந்து, மகிழ்வித்து கண்டனைய, மண்டு புகழ், வண்டமிழ்ப் பணி ஆற்றிடுக ! தண்டமிழ் தழைத்திடச் செய்திடுக !! 

தமிழ்ப் பணியில்,
உங்கள் பணிவுள்ள,
கம்பன் தமிழ் ஆய்வு மையத்தினர்

மேலும் இது குறித்த விவரங்களைப் பெறுவதற்குக் கீழ்க்காணும் சுட்டியை அழுத்துக.


விண்ணப்பப் படிவத்திற்குக் கீழ்க்காணும் சுட்டியை அழுத்துக.


மேலும் அறிந்து கொள்ள கீழ்க்காணும் சுட்டியை அழுத்துக.
நமது வலைப்பூக்களுக்கு வரவேற்கிறோம்.








No comments:

Post a Comment